• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உயர் மண்சரிவு அபாயமிக்க பிரதேசங்களில் முன்வார்ப்புச் செய்யப்பட்ட அனர்த்த மீட்சி வீடுகளை நிர்மாணித்தல்
- அவசர அனர்த்த நிலைமைகளின்போது பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவியினை அளிப்பதற்காக பணத்தினை வரவு வைக்கும் முகமாக நன்கொடையாளர்கள் சார்பில் "செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு" எனும் பெயர் கொண்ட கணக்கொன்று திறக்கப்பட்டுள்ளதுடன், 2019 03 31 ஆம் திகதியிலுள்ளவாறு 294.72 மில்லியன் ரூபாவைக் கொண்ட மீதியொன்று இந்தக் கணக்கில் அறிக்கையிடப்பட்டுள்ளது. அனர்த்த அபாயம் மிக்க பிரதேசங்களில் வசிக்கின்ற குடும்பங்கள் சார்பிலும் நாடளாவிய ரீதியில் மண்சரிவுகள் மற்றும் வௌ்ளப்பெருக்கு அனர்த்தங்கள் காரணமாக மீள் குடியமர்த்தப்பட வேண்டிய குடும்பங்கள் சார்பிலும் 10,000 முன்வார்ப்புச் செய்யப்பட்ட அனர்த்த மீட்சி வீடுகளை நிர்மாணிப்பதற்கு சீனாவின் முனைப்பான தொழிற்படு நிறுவனமொன்றினால் செய்யப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட கணக்கிலுள்ள நிதியங்களைப் பயன்படுத்தி முன்னோடி கருத்திட்டமொன்றாக, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படும் 400 வீடுகளில் 230 வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டு பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.