• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக கேபிள் கார் கருத்திட்டமொன்றை ஆரம்பித்தல்
- உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலா பிரயாணிகளின் நட்சத்திர கவர்ச்சி பொருந்திய சிறப்பான சூழலைக் கொண்ட நுவரெலியா இலங்கையின் உயர் மையத்தில் அமைந்துள்ளதுடன் அதன் வசீகரத்தை அதிகரிக்கும் மேலதிக நடவடிக்கையொன்றாக, நானுஓயாவிலிருந்து Single Tree மலை மற்றும் கிறகரி வாவி வரை கேபிள் கார் கருத்திட்டமொன்றை ஆரம்பிக்கும் முகமாக கருத்திட்ட பிரேரிப்பொன்று Outdoor Engineering Lanka (Pvt.) Ltd. நிறுவனத்தினாலும் அதன் வௌிநாட்டு பங்காளரான Doppelmayr Cable Car நிறுவனத்தினாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பெட்டியிலும் பத்து ஆட்கள் பயணிக்கக்கூடிய 86 பெட்டிகளை உள்ளடக்கி அவற்றில் 43 பெட்டிகள் இதன் முதற்கட்டத்தின் கீழ் தாபிக்கப்படும் பொருட்டு நுவரெலியாவிலுள்ள நானுஓயா புகையிரத நிலையம், குதிரைப் பந்தயத்திடல் (Racecourse) மற்றும் Single Tree மலை ஆகியவற்றை இணைத்து 21 கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கை முதலீட்டுச் சபையின் கருத்திட்டமொன்றாக இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.