• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புறக்கோட்டை - பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலைய கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு வசதிகளை செய்யும் செயலணியாக உயர்மட்ட குழுவொன்றை உருவாக்குதல்
- புறக்கோட்டை - பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலையத்தினை தாபிப்பதற்கும் தனியார் துறை நிதி உதவியிலிருந்து இந்த கருத்திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பான செயற்பாடுகளை பொறுப்பேற்கும் பொருத்தமான முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வ வௌிப்படுத்தலை கோருவதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் திட்டத்தினை பூர்த்திசெய்யும் பொருட்டு, தீர்க்கப்படவேண்டிய சிக்கலான சில பிரச்சினைகள் உள்ளன. அதற்கிணங்க, இந்த கருத்திட்டம் தொடர்பான தொழிநுட்ப மற்றும் நிதி சாத்தியத்தகவாய்வுகளை முற்றாக்குவதற்கும் கூறப்பட்ட பிரச்சினைகளில் தலையிட்டு தீர்மானங்களை எடுக்கும் பொருட்டு புறக்கோட்டை - பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலையத்தின் செயலணியாக செயலாற்றுவதற்கு வழிப்படுத்தல் குழுவொன்றை நியமிப்பதற்கும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.