• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச தொலைத்தொடர்பாடல் தொழிற்பாட்டாளர்களின் வரி சம்பந்தமான ஒழுங்கு விதிகள்
- 2019 06 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக வௌிச்செல்லும் உள்நாட்டு அணுகுகைக் கட்டணம் தொடர்பில் செலுத்தவேண்டிய வரியை நீக்கும் பொருட்டும், 2019 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்டவாறு உள்வரும் சர்வதேச அழைப்புக்கள் தொடர்பில் செலுத்தவேண்டிய வரி, விசேட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பான உள்வரும் சர்வதேச அழைப்பு கட்டணம், உள்வரும் அழைப்புக்களாக வரி செலவிடுகை வீதம், அணுகுகைக் கட்டணம், தொலைத்தொடர்பாடல் அபிவிருத்தி கட்டணம் மற்றும் வௌிச்செல்லும் உள்நாட்டு அணுகுகைக் கட்டணமாக வரி செலவிடுகை வீதம் என்பவற்றின் செல்லுபடியாகும் காலப்பகுதியை நீடிக்கும் பொருட்டும் மற்றும் 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்திற்கேற்ப அங்கீகாரத்தின் பொருட்டு 2019 05 14 ஆம் திகதியிடப்பட்டதும் 2123/19 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.