• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை
- அரசாங்க நிருவாகம் என்னும் விடயம் கையளிக்கப்பட்டுள்ள அமைச்சின் செயலாளருக்கு தாபனவிதிக்கோவையின் ஊடாக கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை தொடர்பிலான சுற்றறிக்கையொன்று 2019 05 29 ஆம் திகதியன்று வௌியிடப்பட்டது. ஆயினும், இந்த சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்க நிருவாகம் என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மேற்போந்த சுற்றறிக்கையை திருத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமை நேரங்களின் போது தமது அலுவலக மனையிடத்திற்கு வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் நீளக் காற்சட்டையும் சேர்ட்டும் அல்லது தேசிய உடை அணிந்திருக்க வேண்டுமென்பதோடு, பெண் உத்தியோகத்தர்கள் சேலை, "ஒசரி" அல்லது அரசாங்க சேவையின் கௌரவத்தை பேணும் விதத்தில் பொருத்தமான ஒழுக்கமான உடையினை அணியவேண்டுமெனவும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பெண் உத்தியோகத்தர்களின் முகம் தெரியும் விதத்தில் இருக்கவேண்டுமெனவும் பொது மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத உடையாதல் வேண்டுமெனவும் இந்த ஏற்பாடுகளை உள்ளடக்கி சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வழங்குமாறு பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.