• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எதிர்வரும் எட்டு மாத காலத்திற்கு டீசல் மற்றும் பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
- 2019 07 15 ஆம் திகதியிலிருந்து 2020 03 14 ஆம் திகதிவரை எட்டு மாத காலப்பகுதிக்குத் தேவையான 420,000 பெரல் டீசல் (ஆகக்கூடுதலான சல்பர் நூற்றுவீதம் 0.001), 1,040,000 பெரல் டீசல் (ஆகக்கூடுதலான சல்பர் நூற்றுவீதம் 0.05) மற்றும் 1,084,000 பெரல் பெற்றோல் (92Unl) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு சிங்கப்பூர் M/s Vitol Asia Pte. Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.