• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிழக்கு மாகாணத்தில் 845.83 கீலோ மீற்றர் வீதி அபிவிருத்தி
- கிராமிய பிரதேசங்களுக்கும் சமூக பொருளாதார மைய நிலையங்களுக்கும் இடையிலான பாதைகளை விருத்தி செய்யும் நோக்கில் செயற்படுத்தப்படும் இரண்டாவது கூட்டு வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திற்குள் 05 கருத்திட்ட பொதிகளின் கீழ் 408.62 கிலோமீற்றர்கள் கொண்ட கிராமிய வீதிகளை விருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல், மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் 03 கருத்திட்ட பொதிகளின் கீழ் 221.28 கிலோமீற்றர்கள் கொண்ட கிராமிய வீதிகளை விருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல், திருகோணமலை மாவட்டத்திற்குள் 03 கருத்திட்ட பொதிகளின் கீழ் 215.93 கிலோமீற்றர்கள் கொண்ட கிராமிய வீதிகளை விருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கிணங்க, அம்பாறை மாவட்டத்திற்கான 01 ஆம் 02 ஆம் பொதிகளுக்கான ஒப்பந்தங்களை M/s NEM Construction (Pvt.) Ltd நிறுவனத்திற்கும் 03 ஆம் பொதிக்கான ஒப்பந்தத்தை M/s AMSK - CHEC கூட்டு தொழில்முயற்சிக்கும் 04 ஆம் பொதிக்கான ஒப்பந்தத்தை Maga Engineering (Pvt.) Ltd நிறுவனத்திற்கும் 05 ஆம் பொதிக்கான ஒப்பந்தத்தை Nawaloka Construction Company (Pvt.) Ltd நிறுவனத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 01 ஆம் 02 ஆம் பொதிகளுக்கான ஒப்பந்தங்களை சீனாவின் Chongquing International Corporation நிறுவனத்தினால் Sun Construction நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டுத் தொழில்முயற்சிக்கும் 03 ஆம் பொதிக்கான ஒப்பந்தத்தை Nawaloka Construction Company (Pvt.) Ltd நிறுவனத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கான 01 ஆம் 03 ஆம் பொதிகளுக்கான ஒப்பந்தங்களை Edward & Christie நிறுவனத்திற்கும் 02 ஆம் பொதிக்கான ஒப்பந்தத்தை Maga Engineering (Pvt.) Ltd நிறுவனத்திற்கும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.