• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசசார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரச்சான்றும் பலப்படுத்தலும்
- வருடாந்தம் 150,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் நுழைவதற்கு தகமை பெற்றாலும் தேசிய பல்கழைக்கழங்களில் நிலவும் வசதிகளின் வரையறை காரணமாக 125,000 மேற்பாட்ட மாணவர்களுக்கு தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் நுழைவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. இதற்கு தீர்வொன்றாக அரசசார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து பட்டம் பெற்றுக் கொள்வதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் பல்வேறுபட்ட ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. அரசாங்கத்தின் உயர் கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட உயர்கல்வி விரிவாக்கல் அபிவிருத்தி செயற்பாடு என்னும் கருத்திட்டத்திலுள்ள சேமிப்புகளை பயன்படுத்தி தரமதிப்பீடு செய்யப்பட்ட அரசசார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரச பல்கலைக்கழக முறைமைக்குள் அனுமதி கிடைக்கப்பெறாத உயர்தரம் சித்தியடைந்தவர்களின் உயர்கல்வி வாய்ப்பினை அதிகரிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெறும். இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உயர்கல்வி விரிவாக்கல் அபிவிருத்தி செயற்பாடு என்னும் கருத்திட்டத்திலுள்ள சேமிப்புகளை பயன்படுத்தி என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தரமதிப்பீடு செய்யப்பட்ட அரசசார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேற்பார்வை செய்வதற்கு உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்குமாக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.