• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுக்கித்தபுரவர நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ச்சிகயாக மேற்கொள்தலும் புதிய கருத்திட்டங்களுக்கு மதியுரை சேவைகளை நியமித்தலும்
- சுக்கித்தபுரவர நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு இது வரை முடிவுறுத்தப்படாத கருத்திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை யினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மஹர வர்த்தக கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல், ஹட்டன் புகையிரத நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகைள திட்டமிடுதல் மற்றும் நிர்மாணித்தல், அவிஸ்சாவெலை மணமேந்திர வீதியை விருத்தி செய்தல், சுமனகீர்த்தி மஹா பிரிவெனாவின் உத்தேச மாடிக் கட்டடத்தை நிர்மாணித்தல், மீவித்திகம்மன நாலிக்காராமயவின் உத்தேச மாடிக் கட்டத்தை நிர்மாணித்தல், இரத்தினபுரி சப்பிரகமுவ சமன் மஹா தேவாலயத்தின் நிலக்கீழ் கேபில்களை பதித்தல், எம்பிலிபிட்டிய காவன்திஸ்ஸ குள நகர பூங்காவை நிர்மாணித்தல், களுத்துறை பொது விற்பனை நிலையத்தை நிர்மாணித்தல், அநுராதபுரம் புனித நகர துப்பரவேற்பாட்டு வசதிகளை செய்தல், முல்லைத்தீவு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், குபிச்சம் குளம் பொழுதுபோக்கு பிரதேச நிர்மாணிப்பு, கொட்டாவை தலகல வீதி அபிவிருத்தி மற்றும் கிரிமண்டல வீதி அபிவிருத்தி ஆகிய கருத்திட்டங்களில் செய்யப்படவேண்டிய கட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.