• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புகஸ்கந்த மின் நிலையத்தின் 02 ஆம் உற்பத்தி இயந்திரத்திற்கு அத்தியாவசியமான பிரதான திருத்த வேலையை மேற்கொள்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளுக்கிணங்க, சப்புகஸ்கந்த மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கி தொகுதிகளின் முறையான இயக்கம் கருதி 24,000 ஓட்ட மணித்தியாலயத்தின் பின்னர் செய்யப்படவேண்டிய, கூறப்பட்ட மின் நிலையத்தின் 02 ஆம் உற்பத்தி இயந்திரத்தின் பிரதான திருத்த வேலைக்கான உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை 1.8 மில்லியன் யூரோவைக் கொண்ட தொகைக்கு உபகரணத்தின் ஆரம்ப உற்பத்தியாளரான பிரான்சின் MAN Energy Solution நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.