• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எக்ஸ்போ 2020 டுபாய் - இலங்கையின் பங்கேற்பு (
- வேர்ள்ட் எக்ஸ்போ ஆனது 6 மாத காலப்பகுதிக்கு மேற்பட்டு, ஐந்து (05) வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற மிகவும் பிரபல்யமானதும் பெரியளவிலானதுமான சர்வதேச கண்காட்சிகளில் ஒன்றாகுமென்பதுடன் இதனை 2020 ஆம் ஆண்டில் டுபாயில் நடாத்துவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால், இந்த கண்காட்சியில் பங்குபற்றுதலானது நாட்டின் மதிப்பை அதிகரித்தும் அதன் ஆற்றல்களை வௌிகாட்டும் அதேவேளை வர்த்தகம், சந்தைப் பங்கு மற்றும் வியாபாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் நேரடி வௌிநாட்டு முதலீடு, பகிரப்படும் தொழிநுட்பங்கள், தகவல் தொழிநுட்பம், போக்குவரத்து, சுற்றுலா தொழில்துறை மற்றும் ஏனைய சேவைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் வழிவகுக்கும் என்னும் விடயத்தை கருத்திற் கொண்டு, இந்த கண்காட்சியில் பங்கெடுப்பதற்குத் தேவைப்படும் ஏற்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்த நோக்கம் கருதி ஏனைய அவசியமான வசதிகளை வழங்குவதற்கும் அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.