• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன சட்டத்தை திருத்துதல்
- அரசாங்கத்தின் மொழிக் கொள்கையை நடைமுறை ரீதியாக அமுல்படுத்தும் நோக்குடன் 2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன சட்டத்தின் மூலம் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தாபிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பிரதான நோக்கங்களாவன சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர்களையும், மொழிபெயர்ப்பாளர்களையும் உரைபெயர்ப்பாளர்களையும் உருவாக்குதலும் மும்மொழித் தேர்ச்சி கொண்ட ஆட்களை பயிற்றுவித்தலும் ஆகும். தற்கால போக்குகளுக்கு ஏற்ற விதத்தில் நிறுவனம் தாபிக்கப்பட்ட நோக்கத்தை மிகவும் பரந்துபட்டதாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு பல்கலைக்கழங்களுடனும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுடனுமான இடைத்தொடர்புகளை விருத்தி செய்வதன் மூலம் மொழிக்கற்கை நெறிகளை நடாத்துவதற்கும் பிரதேச மட்டத்தில் மொழி வகுப்புகளை நடாத்துவதற்கும் மற்றும் பிரதேச பயிற்சி நிலையங்களை தாபிப்பதற்கும் 2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன சட்டத்தை திருத்தும் பொருட்டு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.