• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தூர்வார் பணிகள் மற்றும் சுத்தப்படுத்தல் மூலம் பேரே ஏரியை சுத்திகரிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- தற்போது பேரே ஏரியின் சுற்றுப்பிரதேசம் வர்த்தக மற்றும் வதிவிட மைய நிலையமாக பயன்படுத்தப்படுவதோடு அதன் சுற்று சூழலை கவரும் விதத்தில் அமைத்து ஏரியின் நீரை பாதுகாக்கும் நோக்கில் 800 மில்லியன் ரூபா முதலீட்டில் பேரே ஏரியின் தூர்வார் பணிகள், பேரே ஏரியின் நீர் வௌியேறும் வழியின் திருத்த வேலைகள், நீரின் தரமட்டத்தை பரிசீலனை செய்தல் மற்றும் பேரே ஏரியில் திண்மக் கழிவு மற்றும் மாசுக்கள் இடப்படுவததைத் தடுத்தல் ஆகியன உள்ளடக்கப்பட்ட கருத்திட்டமொன்றை இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.