• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெனியாய ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கான கருத்திட்டம்
- தெனியாய ஆதார வைத்தியசாலை இந்த பிரதேசத்திலுள்ள இரண்டாம்நிலை சிகிச்சை சேவைகளை வழங்கும் ஒரேயொரு வைத்தியசாலையாவதோடு, சுமார் 350,000 பேர்கள் இதன் மூலம் சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்கின்றனர். இந்த வைத்திசாலையானது மண்சரிவு ஆபத்துமிக்க பிரதேசமொன்றில் அமைந்துள்ளமையினால் இதனை வேறு இடமொன்றில் தாபிக்குமாறு புவியியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது இந்த வைத்தியசாலையில் உள்ள பௌதிக மற்றும் மனித வளங்கள் எதிர்பார்க்கப்பட்டவாறு சேவை நாடுநர்களுக்கு தரமிக்க சேவையினை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை. இதற்கமைவாக இந்த வைத்திசாலையில் 600 படுக்கைகளையும் ஏனைய நவீன வசதிகளையும் கொண்ட புதிய ஆதார வைத்திசாலையொன்றாக அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கபடும் புதிய ஆதார வைத்திசாலையை தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியினால் அரசாங்கத்திற்கு விடுவிப்பதற்கு உடன்பட்டுள்ள 33 ஏக்கர் நிலப்பரப்பில் தாபிக்கும் பொருட்டு தேவையான காணிகளை சுவீகரிப்பதற்கும் அதற்குத் தேவையான ஏனைய வசதிகளை வழங்குவதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.