• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச உறவுகள் மற்றும் திறமுறை கற்கைக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்திற்கும் கியுபா குடியரசின் சருவதேச உறவுகள் பற்றிய ராவூல் ரோவா காசியா நிறுவகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சருவதேச உறவுகள் மற்றும் திறமுறை கற்கைக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்திற்கும் கியுபா குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சருவதேச உறவுகள் பற்றிய ராவூல் ரோவா காசியா நிறுவகத்திற்கும் இடையில் கற்கை மற்றும் நிபுணர் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு இந்த இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.