• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொஹூவல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்காக ஹங்கேரிய EXIM வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
- பொது மக்களுக்கு மிக விரைவானதும் பாதுகாப்பானதுமான போக்குவரத்து வசதிகளைச் செய்யும் நோக்கில் கொஹூவல மற்றும் கெட்டம்பே பிரதேசங்களில் மேம்பாலங்களை நிர்மாணிக்கும் பொருட்டு உரிய ஒப்பந்தக்காரர்களுடன் வர்த்தக உடன்படிக்கை யொன்றை செய்து கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிர்மாணிப்பு பணிகளுக்குத் தேவையான நிதியுதவியினை வழங்குவதற்கு ஹங்கேரிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, இந்த கருத்திட்டத்திற்குத் தேவையான 52 மில்லியன் யூரோக்களைக் கொண்ட சலுகை கடன் தொகையொன்றை ஹங்கேரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்த வங்கியுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.