• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சட்ட விரோதமான மதுபானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகாரத்தினை கையளித்தல்
- சட்ட விரோதமான மதுபானங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு மதுவரி கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.