• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை சட்டத்தை திருத்துதல்
- சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக அபாயகர ஔடதங்கள் கட்டுப்படுத்தும் தேசிய சபையினை தாபிப்பதற்கும் அதற்கு அதிகாரங்களை கையளிப்பதற்குமாக தாபிக்கப்பட்ட 1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை சட்டம் 1986 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க மற்றும் 1990 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1980 காலப்பகுதிகளை விட தற்போது இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதோடு, மருந்துகளின் முறையற்றப் பாவனையைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் போன்றவற்றுக்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரித்தல் மற்றும் மீளாய்வு செய்தல் என்பவற்றுக்குப் பொறுப்பான பிரதான தேசிய நிறுவனமான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை சட்ட ரீதியாக பலப்படுத்த வேண்டியுள்ளது. இதன் பொருட்டு தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை சட்டத்தை திருத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.