• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இணைய இடைத்தொடர்பு விடயங்களுக்கான தேசிய திறமுறைத் திட்டம்: 2019-2022
- பல்வேறுபட்ட உபகரணங்கள் மற்றும் கருவிகள் ஊடாக தொடர்பாடல்களை மேற்கொள்ளும் தொழினுட்பமான 'இணைய இடைத்தொடர்பு' (Internet of Things - IoT) உலகின் அடுத்த புரட்சிகரமான தொழினுட்ப மாற்றமாக ஏற்றுக் கொள்ளப்படும். ஐக்கிய இராச்சியத்தின் பொறியியல் மற்றும் தொழினுட்ப நிறுவனத்தின் இலங்கை கிளையைச் சேர்ந்த நிபுணர்களினால் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழினுட்ப அமைச்சின் வழிகாட்டலின் மூலம் IoT துறைக்காக 2019-2022 காலப்பகுதியை நோக்காகக் கொண்டு தேசிய திறமுறை திட்டமொன்று வரையப்பட்டுள்ளதோடு, இது உரிய தரப்பு நிறுவனங்களுக்கு இடையில் விரிவான கலந்துரையாடல்களுக்கு உட்பட்டுத்தப்பட்டு அங்கு கிடைக்கப் பெற்ற பிரேரிப்புகள் மற்றும் சிபாரிசுகளை உள்ளடக்கி மேலும் விருத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விருத்தி செய்யப்பட்ட 2019-2022 காலப்பகுதிக்கான இணைய இடைத் தொடர்பு விடயங்களுக்கான தேசிய திறமுறைத் திட்டம் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழினுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அமைச்சரவை அறிந்துகொள்ளும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது .