• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சிறுநீரக நோய் நிதியத்தின் நிதியினை பயன்படுத்தி சிறுநீரக நோய் தடுப்பிற்குரிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரம்மிக்க சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவையினை வழங்கும் நோக்கில் பல்வேறுபட்ட கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதோடு, இதன் பொருட்டு மேலும் மூன்று கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நீண்டகால சிறுநீரக நோய்க்கான காரணங்களை கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி கருத்திட்டம் சிறுநீரக நோய் தடுப்பு செயலணியின் மேற்பார்வையின் கீழ் கண்டி போதனா வைத்தியசாலையின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கும், சிறுநீரக நோய் பற்றிய தகவல் மற்றும் ஆராய்ச்சி நிலையமொன்றைத் தாபிப்பதற்கு களனி பல்கலைக்கழகத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்தல் சிறுநீரக நோய் சார்பில் உள்நாட்டு மருத்துவ சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் சிகிச்சை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றை பண்டாரநாயக்க ஞாபகார்த்த உள்நாட்டு மருத்துவ ஆராயச்சி நிறுவகத்தின் ஊடாக நடாத்துவதற்கும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.