• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு வழங்கப்பட்ட "சலுகை பொதியை" மேலும் விரிவுப்படுத்துதல்
- அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக சுற்றுலாத்துறையின் எதிர்காலம் சம்பந்தமாக எதிர்கொண்ட அச்சுறுத்தலை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த துறையை கட்டியெழுப்புவதற்கு சலுகை பொதியொன்றை வழங்குவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக இந்த சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறை சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளுக்கும் சலுகை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து குறித்த இந்த துறைகளுக்கும் முன்னர் வழங்கிய சலுகையினை மேலும் விரிவுபடுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிணங்க, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்படு மூலதன கடன் திட்டத்திற்கு 2020 மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரை சலுகை காலமொன்றை வழங்குதல், இதற்கான கடன் உத்தரவாத நிதியத்தின் அளவினை விரிவுபடுத்தல், பயணிகள் பேருந்து உரிமையாளர்களுக்கு 2019 யூன் மாதம் 30 ஆம் திகதிவரை 02 மாத கால கடன் சலுகை காலமொன்றை வழங்குதல் இசைக் குழுக்கள் சார்பிலும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்படு மூலதன கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்புபட்ட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறிய அளவிலான தொழிநுட்பம் சாராத துறைகளிலுள்ள ஆட்களுக்கும் நிறுவனங்களுக்கும் தேவையான நிதி உதவிகளை வழங்கும் பொருட்டு பிராந்திய அபிவிருத்தி வங்கியூடாக நடைமுறைப்படுத்தப்படும் "சஞ்சாரக்க பொட்டோ" சலுகை பொதியை நடைமுறைப்படுத்துதல் போன்ற சலுகைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.