• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கு யப்பானில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளின் பொருட்டு ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
- ஏதேனும் குறித்த ஆற்றல்களை பூர்த்திசெய்துள்ள இலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு யப்பானில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்யும் பொருட்டு யப்பான் நீதி அமைச்சு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, சுகாதார, தொழில் மற்றும் நலன்புரி அமைச்சு, தேசிய கொள்கை முகவராண்மை மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்பவற்றுக்கு இடையிலான பயிற்றப்பட்ட ஊழியர்கள் பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்காக தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.