• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க பெறுகை முறையினுள் இலத்திரனியல் அரசாங்க பெறுகை முறையினை அறிமுகப்படுத்துதல் - தீர்வு வழங்குநர் ஒருவரை தெரிவு செய்தல்
- கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரி உள்ளடங்கலாக பரந்துபட்ட வீச்சினைக் கொண்ட அக்கறைதாரரை பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையில் அரசாங்க பெறுகை முறையினுள் இலத்திரனியல் அரசாங்க பெறுகை முறையினை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட பணிக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அரசாங்க நிறுவனங்கள் சார்பில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப தீர்வு வழங்குனராகவும் இந்த கருத்திட்டத்தின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஏற்கனவே பங்களிப்பு செய்துவருவதுமான கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவான 'தீக்சன' எனும் நிறுவனத்தை தெரிவுசெய்யும் பொருட்டும் கூறப்பட்ட நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.