• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனிதவள அபிவிருத்தி புலமைப் பரிசு நிகழ்ச்சித்திட்டத்திற்கான யப்பான் நன்கொடை உதவி நிகழ்ச்சித்திட்டம்
- நாட்டின் அரசாங்க துறையைச் சார்ந்த நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கு யப்பானில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்பின்படிப்பு பாடநெறிகளை கற்பதற்காக 2010 ஆம் ஆண்டில் யப்பான் அரசாங்கத்தினால் மனிதவள அபிவிருத்தி புலமைப் பரிசு நிகழ்ச்சித்திட்டத்திற்கான யப்பான் நன்கொடை உதவி நிகழ்ச்சித்திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது பணிக் கட்டமைப்பானது 2010-2013 ஆண்டுகள் சார்பிலும் இரண்டாவது பணிக் கட்டமைப்பானது 2014-2017 ஆண்டுகள் சார்பிலும் மூன்றாவது பணிக் கட்டமைப்பானது 2018-2021 ஆண்டுகள் சார்பிலும் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, மூன்றாவது பணிக்கட்டமைப்பின் இரண்டாவது குழுவுக்கான புலமைப்பரிசில்தாரர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழுவுக்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்கும் இதன் பொருட்டு தேவையான 263 மில்லின் யப்பான் யென் மானியமொன்றை பெற்றுக் கொள்வதற்கும் யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.