• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வன அழிப்பினை தடுக்கும் நோக்கில் இயந்திர சங்கிலி அரிவாள் இறக்குமதியை தடை செய்தல்
- நாட்டின் மொத்த நிலப் பிரதேசத்தின் சுமார் 29.7 சதவீதம் காடுகளாவதோடு, இதனை 2030 ஆம் ஆண்டளவில் 32 சதவீதமாக அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உரிய பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டபூர்வமற்ற விதத்தில் மரங்களை வெட்டுதல் வனங்கள் அழிந்துபோவதற்கான பிரதான காரணியொன்றென இனங்காணப்பட்டுள்ளதோடு, இந்த வன அழிப்புக்கு இலகுவாக கொண்டு செல்லக்கூடிய இயந்திர சங்கிலி அரிவாள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்போது 82,000 இற்கும் கூடுதலான இயந்திர சங்கிலி அரிவாள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையினால் வன ஒழிப்பினை தடுக்கும் மற்றும் வனச் செய்கையை அதிகரிக்கும் நோக்கில் இயந்திர சங்கிலி அரிவாள் இறக்குமதியை தடைசெய்வதற்காக 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.