• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான பயனுள்ள வகையில் பொருளாதார பணிகளுக்காக பயன்படுத்த முடியாத காணிகளை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் துரித வனச்செய்கை நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பயன்படுத்துதல்
- நாட்டின் மொத்த நிலப் பிரதேசத்தின் சுமார் 29.7 சதவீதம் காடுகளாவதோடு, இதனை 2030 ஆம் ஆண்டளவில் 32 சதவீதமாக அதிகரித்துக் கொள்வதை அரசாங்கம் குறியிலக்காகக் கொண்டுள்ளது. இதன் பொருட்டு மேலும் சுமார் 148,000 ஹெக்டயார் நிலப்பரப்பில் வனச் செய்கையை விரிவுபடுத்துவற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த குறியிலக்கை அடைவதற்கு வன பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் மாத்திரம் போதுமானதாக இல்லாமையினால் வேறு அரசாங்க மற்றும் தனியார் காணிகளை இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக பயன்படுத்துவற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளிலிருந்து தற்போது பொருளாதார பயிர்ச் செய்கைகளற்ற மற்றும் காடுகள் 65 சதவீதத்தினை விஞ்சியுள்ள சகல காணிகளையும், அரசாங்க மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிகளிலிருந்து ஏற்கனவே வனப்பாதுகாப்புத் திணைக்களத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கலப்பு வனச் செய்கை நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்திற்கு அமைவாக இனங்காணப்படும் காணிகளையும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் காடுகளை அதிகரிக்கும் துரித நிகழ்ச்சித்திட்டத்திற்காக பயன்படுத்தும் பொருட்டு சுவீகரித்துக் கொள்வதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.