• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு தமது நன்மைகளை இலகுவாகவும் காலதாமதமின்றியும் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்குத
- தனியார் மற்றும் பகுதி அரசாங்க துறைசார்ந்த ஊழியர்களுக்கு ஓய்வூதிய நலன்களை ஏற்பாடு செய்யும் நோக்கில் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சேவை கொள்வோரினால் ஊழியர் ஒருவரை சேவையில் சேர்த்துக் கொண்டதன் பின்னர் குறித்த ஊழியர்களின் தகவல்களை தொழில் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு சேவை கொள்வோர் கட்டுப்பட்டிருந்த போதிலும் இந்த தகவல்களை வழங்குவது எவ்வளவு காலப்பகுதிக்குள் என்பது சம்பந்தமாக மேற்போந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆதலால் பெருமளவிலான ஊழியர்கள் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளாகுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு ஊழியர் ஒருவர் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட தினத்திலிருந்து குறித்துரைக்கப்படும் திட்டவட்டமான காலப்பகுதியொன்றுக்குள் ஊழியர் சம்பந்தப்பட்ட தகவல்களை தொழில் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு தொழில் கொள்வோருக்கு பணிப்பு விடுப்பதற்கும். தொழில்கொள்வோர் இவ்வாறு தகவல் வழங்குதலை தவறும் சந்தர்ப்பங்களில் உரிய ஊழியருக்கு குறித்த இந்த தகவல்களை நேரடியாக அறிவிப்பதற்கும் இயலுமாகும் வகையில் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்கும் பொருட்டு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.