• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதலும் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைத்தலும்
- அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக மரணமடைந்த மற்றும் முழுமையாக அங்கவீன நிலைமைக்கு ஆளான ஒருவர் சார்பில் 10 இலட்சம் ரூபா வீதம் வழங்குவதற்கும் காயமடைந்தவர்கள் சார்பில் 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குவதற்கும் சேதமடைந்த சொத்துக்கள் சார்பில் 5 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இழப்பீட்டு அலுவலகத்தின் ஊடாக ஏற்கனவே 198 மில்லியன் ரூபாவிற்கு மேல் நட்டஈடு தொகையானது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, தேவாலயங்களின் புனரமைப்பிற்காக 25 மில்லியன் ரூபா முற்பணமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் பாதுகாப்பினை உறுதிச் செய்வதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான 09 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை இந்த தேவாலயத்திற்கு உடமையாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தாக்குதல் காரணமாக அங்கவீனமுற்றவர்களுக்கும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் மேலும் தேவைப்படும் சலுகைகளை வழங்குவதற்காக அரசாங்க மற்றும் தனியார் துறை நன்கொடைகள் மூலம் 500 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியமொன்றை உருவாக்குவதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் விசேட தேவைகளை இனங்கண்டு மேலும் தேவைப்படும் சலுகைகளை வழங்கும் பொருட்டும் உரிய நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.