• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத கடவை பாதுகாப்பு முறைமைகளை கொள்வனவு செய்தல்
- நாட்டின் புகையிரத சேவையை மேம்படுத்தி மிகச் சிறந்த சேவையொன்றை வழங்கும் பொருட்டு இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 200 மணி மற்றும் ஒளி சைகையுடன் கூடிய புகையிரத கடவை பாதுகாப்பு முறைமைகளை வழங்கி, பொருத்தி, பரிசோதித்து, நடைமுறைப்படுத்தி, பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்தியாவின் M/s kernex Micro Systems (India) Ltd., நிறுவனத்திற்கு 8.18 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.