• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை - ஜா-எல இடைமாறலின் தெற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கான நுழைவு மற்றும் வௌியேறல் பாதைகளை நிர்மாணித்தல்
- கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை - ஜா-எல இடைமாறலில் வாகனங்கள் நுழைவதற்கும் வௌியேறுவதற்கும் இரண்டு பாதைகள் உள்ளன. இந்த பாதைகளிலொன்று நேரடியாக கட்டணம் சேர்க்கும் (Manual Toll Collection - MTC) கருமபீடத்துடனும் மற்றைய பாதையானது மின்னணு கட்டண அறவிடும் (Electronic Toll Collection - ETC) கருமபீடத்துடனும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஜா-எல மற்றும் அது சார்ந்த பிரதேசங்களில் துரிதமாக சனத்தொகை அதிகரித்து வருகின்றதன் காரணமாக ஜா-எல இடைமாறலை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை எதிர்பாராத விதத்தில் அதிகரித்துள்ளதோடு, வாகனங்கள் கூடுதலாக பயன்படுத்தும் வேளைகளில் இந்த இடைமாறலில் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஜா-எல இடைமாறலில் மேலதிக நுழைவு மற்றும் வௌியேறல் பாதைகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையின் ஜா-எல இடைமாறலின் தெற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கான நுழைவு மற்றும் வௌியேறல் பாதைகளில் நேரடியாக கட்டணங்களை சேர்க்கும் கருமபீட வசதிகளுடன் மேலதிக சாய்வான பாதைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 285.4 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s RR Construction (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.