• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரிபோஷ உற்பத்திக்கு முழு ஆடைப்பால் மா கொள்வனவு செய்தல்
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதேபோன்று மந்த போசாக்கு நிலைமையிலுள்ள பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் போசாக்குமிக்க உணவொன்றான திரிபோஷவை உற்பத்தி செய்யும் பொருட்டு இலங்கை திரிபோஷ லிமிட்டட் நிறுவனத்திற்கு 600 மெற்றிக்தொன் முழு ஆடைப்பால் மா கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வரையறுக்கப்பட்ட மில்கோ தனியார் நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.