• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்
- மத்திய, ஊவா, சப்பிரகமுவ, வடமேல் மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களில் பெருந்தோட்டம் சார்ந்து வசிக்கும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களின் கல்வித் தேவைகள் பெருந்தோட்ட பாடசாலைகளினால் நிறைவேற்றப்படுகின்றன. ஆயினும், இந்த பாடசாலைகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமையினால் இந்த மாணவர்களுக்கு தரமான கல்வியினை வழங்குவது பிரச்சினையாக உள்ளது. ஆதலால், பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளினது கல்வி தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டுவரும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 300 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டின் கீழ் பெருந்தோட்டங்கள் சார்ந்துள்ள குறைந்த வசதிகள் கொண்டதென இனங்காணப்பட்டுள்ள பாடசாலைகளில் கட்டட திருத்த வேலைகள், வகுப்பறை வசதிகள், துப்பரவேற்பாட்டு வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் இந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கூறப்பட்ட நோக்கம் கருதி இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணவு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.