• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
- பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு வீடமைப்பு மற்றும் ஏனைய வசதிகளை வழங்கும் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இந்த மக்களின் வீண் செலவு முறை, எண்ணப்போக்கில் காணப்படும் பலவீனம் போன்றவை காரணமாக இந்தக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எய்தப்படுவதற்கான குறியிலக்குகளின் நன்மைகளை எதிர்பார்க்கபட்டவாறு வெற்றிகொள்ள முடியாமற் போயுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் இதன் ஊடாக தேயிலையின் தரத்தையும் அளவையும் அதிகரித்தல் மற்றும் பெருந்தோட்டத்தில் மதுபாவனையைக் குறைக்கும் எதிர்பார்ப்புடன் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்பன திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்கள் உழைக்கும் பணத்தினை பயனுள்ள விதத்தில் முகாமித்துக் கொள்வது பற்றி அறிவுறுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அவர்களுக்கு புரிந்துணர்வினைப் பெற்றுக் கொடுப்பதன்பாலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை முன்னோடி கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.