• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பொன்றை உள்வாங்குதல்
- டெங்கு நோயை மரபுரீதியான வழிமுறைகளின் மூலம் கட்டுப்படுத்தும் போது நிலவும் பலவீனம் காரணமாக இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வினைத்திறன் மிக்கதும் சுற்றாடல் நட்புறவு மிக்கதுமான உயிரியல் கட்டுப்பாட்டு முறையொன்றை பயன்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளதோடு, டெங்கு வைரஸ் பரவுவதை தடுக்கும் நீண்டகால வழிமுறையொன்றாக 'Wolbachia' பக்றீரியாவை பயன்படுத்தும் கருத்திட்டமொன்று அவுஸ்திரேலியாவின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்து வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்கு 1.2 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உலகளாவிய நுளம்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவின் மொனாஸ் பல்கலைக்கழகத்தினால் தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியத்திற்கு வழங்கப்படவுள்ளதோடு, இதில் 120,000 அவுஸ்திரேலிய டொலர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பொன்றாக Colombo University College நிறுவனத்தை உள்வாங்குவதற்காக உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது