• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தற்போதுள்ள 1927 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க மருத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
- மருத்துவ கட்டளைச் சட்டமானது பொது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாத்தல், சுகாதார தொழில்சார்பாளர்களின்பாலுள்ள பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்தல் மற்றும் சுகாதார தொழில்சார்பாளர்களின் தொழில் தரத்தை மேம்படுத்துதல் என்பனவற்றுக்காக ஏற்பாடுகளை செய்கின்றது. 1927 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்டு சில திருத்தங்களுக்கு உட்பட்டுள்ள 1927 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க மருத்துவ கட்டளைச் சட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் இலங்கை மருத்துவ கல்லூரி சபையினதும் பொறுப்புகளையும் கடமைகளையும் காலத்திற்கு ஏற்ற விதத்தில் திருத்துவதற்கும் அதேபோன்று மருத்துவ தொழில்சார்பாளர்களின் ஒழுக்க நெறியினை உயர் மட்டத்தில் பேணும் பொருட்டும் நிகழ்காலத்திற்கு ஏற்றவிதத்தில் திருத்தப்பட வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமை வாக, இந்த துறையில் நிபுணத்துவம் மிக்க நிபுணர்கள் குழுவொன்றினால் இவ்வாறு திருத்தத்திற்கு உட்படவேண்டிய துறைகளை இனங்கண்டு கருதுகோள் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கட்டளைச் சட்டத்தை திருத்திக் கொள்வதற்குத் தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு செயலணியொன்றைத் தாபிப்பதற்கும் இந்த செயலணியின் சிபாரிசுகளை சட்ட வரைநருக்கு தொடர்புபடுத்து இந்த கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.