• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
HIV சிகிச்சை நிலையமொன்றுக்காக காணித் துண்டொன்றை குறித்தொதுக்குதல்
- HIV தொற்றுக்கு உள்ளானவர்களுடன் உறவினை பேணியவர்களுக்கு இந்த நோய் தொற்றியுள்ளதா என்பதனை பரிசோதிக்கும் பொருட்டு வசதிகளுடன் கூடிய சிகிச்சை நிலையமொன்றில் ஆகக் குறைந்தது இரண்டு நாட்களாவது அவர்கள் தங்கியிருத்தல் வேண்டும். எய்ட்ஸ், காசநோய், மலேரியா என்பவற்றை இல்லாதொழிப்பதற்கான உலகளாவிய நிதியத்தின் உள்நாட்டு ஒருங்கிணைப்பு பொறிமுறையின் உறுப்பு நிறுவனமொன்றாகவுள்ள Positive Womans Network என்னும் அரச சார்பற்ற அமைப்பினால் மேற்போந்த சேவை சுமார் பத்து வருட காலமாக வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது இந்த நிறுவனத்தினால் குறித்த சேவைகள் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடொன்றில் மேற்கொள்ளப்படுவதோடு, இந்த சேவையினை தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கு இந்த நிறுவனமானது காணித் துண்டொன்றை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைவாக, முல்லேரியா தள வைத்தியசாலை மனையிடத்தில் 10 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணித்துண்டொன்றை இந்த நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.