• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுர்த்தி பயணாளிகளை வலுவூட்டுதல்
- சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்கனவே சுமார் 1.4 மில்லியன் குடும்பங்கள் பயணாளிகளாக உள்ளதோடு, மேலும் சுமார் 600,000 குடும்பங்களுக்கு நலன்களை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் மூன்றாண்டு காலப்பகுதிக்குள் 500,000 குடும்பங்களை வலுவூட்டு வதற்கும் 50,000 உற்பத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சமுர்த்தி பயனாளிகள் வசிக்கும் பிரதேசங்களுக்குள் 5,000 ஏற்றுமதி கிராமங்களும் தாபிக்கப்படவுள்ளதோடு, இதன் மூலம் பொருளாதார பயிர்களினதும் ஏற்றுமதி பயிர்களினதும் உற்பத்தியினை விருத்தி செய்வதற்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். சமுர்த்தி பயனாளிகளை பொருளாதாரத்திற்கும் ஏற்றுமதி வருமானத்திற்கும் பங்களிப்பு நல்கும் தொழிற்படையாக வலுவூட்டி தங்கிவாழும் மனநிலையிலிருந்து அவர்களை விடுவித்துக் கொள்வதற்கான அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை நாடு முழுவதும் மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை பற்றி ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.