• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வசுத்தரிப்பு நிலையங்கள், புகையிரத நிலையங்கள் என்பவற்றில் துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்துதல்
- புகையிரத நிலையங்களிலும் வசுத்தரிப்பு நிலையங்களிலும் உள்ள அடிப்படை துப்பரவேற்பாட்டு வசதிகள் அடங்கலாக உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாமையினால் இந்த இடங்களில் உள்ள துப்பரவேற்பாட்டு வசதிகளை விருத்தி செய்வதற்கு 2019 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் ஒருங்கிணைப்புடன் துப்பரவேற்பாட்டு வசதிகள் விருத்தி செய்யப்படவேண்டிய பொது இடங்களை இனங்கண்டு இந்த கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.