• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி மாவட்ட தேசிய வீதிகளின் 51.7 கிலோ மீற்றர் நீளமான தூரத்தை புனரமைத்தல்
- தெற்கு, சப்பிரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மாகா ணங்களினதும் களுத்துறை மாவட்டத்தினதும் பிரதான சமூக பொருளாதார மத்திய நிலையங்களுடன் கிராமப் புற பிரதேசங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கான அணுகு வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், காலி மாவட்டத்தில் 51.7 கிலோமீற்றர் தேசிய வீதிகளை புனரமைத்து மேம்படுத்துவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, கூறப்பட்ட வீதிகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவின் Yunnan Construction and Investment Holding Group Co.Ltd., மற்றும் M/s. K.D.A.Weerasinghe & Company (Pvt) Ltd., நிறுவனங்கனின் கூட்டு தொழில்முயற்சிக்கு 6,108.2 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.