• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூர்யபல சங்ராமய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திருகோணமலை மற்றும் மொனராகலை நெய்யறி உபநிலையங்கள் 02 சார்பில் ஒரு மெகாவொட் ஆற்றல் கொண்ட மின் நிலையங்களை நிர்மாணித்தல்
- சூர்யபல சங்ராமய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய மின் கம்பி வலையமைப்புடன் இணைக்கப்படும் பொருட்டு 90 சிறியளவிலான சூரிய சக்தி மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக பதினேழு பொருத்தமான நெய்யறி உப மின் நிலையங்கள் இனங்காணப்பட்டன. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள வாறு, திருகோணமலை நெய்யறி உப மின் நிலையத்துடன் இணைக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் ஒரு மெகாவொட் ஆற்றலைக் கொண்ட 07 சூரியசக்தி மின் கருத்திட்டங்களில் 03 கருத்திட்டங்களை M/s. Suncor Solar City (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும் அத்துடன் மீதமுள்ள 04 கருத்திட்டங்களை M/s. Capital City Holdings (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும் மற்றும் மொனராகலை நெய்யறி உப மின் நிலையத்திற்கு இணைக்கப்படவுள்ள ஒரு மெகாவொட் ஆற்றலைக் கொண்ட 05 சூரியசக்தி மின் கருத்திட்டங்களில் 04 கருத்திட்டங்களை M/s. Gold Corporations Lanka (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும் மீதமுள்ள கருத்திட்டத்தை M/s. Nihon Green Power Company (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.