• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் தடங்கலற்ற தொழிற்பாட்டை உறுதிப்படுத்துதல்
- 152 மெகாவொட் ஆற்றலைக் கொண்ட சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் தடங்கலற்ற தொழிற்பாட்டை உறுதிப்படுத்தும் பொருட்டு, மின்சாரத்தை பிறப்பாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் 05, 07, 08 மற்றும் 10 எனும் இலக்கங்களைக் கொண்ட இயந்திர வகைகளை ஒவ்வொரு 6,000 மணித்தியால தொழிற்பாட்டுக் காலப்பகுதி சார்பில் புனரமைப்புச் செய்யவேண்டியதுடன், ஒவ்வொரு 12,000 மணித்தியால தொழிற்பாட்டுக் காலப்பகுதி சார்பில் 06, 09, 11 மற்றும் 12 எனும் இலக்கங்களைக் கொண்ட இயந்திர வகைகளை புனரமைப்புச் செய்யவேண்டி யுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, கூறப்பட்ட புனரமைப்புகளுக்குத் தேவைப்படும் உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை ஆரம்ப உற்பத்தியாளரான ஜேர்மனியின் M/s. MAN Energy Solution SE நிறுவனத்திற்கு 1.1 மில்லியன் யூரோக்களைக் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.