• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் ருகுணு பல்கலைக்கழகத்திலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் வசதிகளை விரிவாக்குதல்
- பல்கலைக்கழ மாணவர்களுக்குத் தேவைப்படும் வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கட்டடங் களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்வதன் மீது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான மூன்று மாடி நூலகக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 312.2 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. Central Engineering Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும், ருகுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு பத்து மாடி காவறை கட்டடதொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 1,138.3 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. Central Engineering Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான சேவைகள் பீடத்திற்கு ஐந்து மாடி கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 378.8 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. K.S.J. Construction (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.