• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிற்பயிற்சி மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தி
- தொழிற்பயிற்சி பணிகளின் அபிவிருத்தி, சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் முகங்கொடுக்கும் தடைகளை நீக்குதல் மற்றும் தொழினுட்ப உதவியினை வழங்குதல் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 11 மில்லியன் யூரோக்கள் கொண்ட உதவியினை வழங்குவதற்கு ஜேர்மன் பெடரல் குடியரசு அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதில் 7 மில்லியன் யூரோக்கள் கொண்ட தொகையானது மாத்தறை மற்றும் கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையங்களின் தொழிற்பயிற்சி பணிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மேலும் 3.5 மில்லியன் யூரோக்கள் கொண்ட தொகையை சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் உலகளாவிய போட்டித் தன்மையினை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 11 மில்லியன் யூரோக்களைக் கொண்ட தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஜேர்மனியுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.