• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் ஜயஶ்ரீ மஹாபோதி (புனித வௌ்ளரசு மரம்) மற்றும் ருவான்வெலி மஹாசாய போன்ற அட்டமஸ்தான வணக்கஸ்தலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
- உள்நாட்டு வௌிநாட்டு பௌத்த மக்களின் நன்மதிப்புக்கு உட்பட்ட ஜயஶ்ரீ மஹாபோதி (புனித வௌ்ளரசு மரம்) மற்றும் ருவான்வெலி மஹாசாய போன்ற அட்டமஸ்தான வணக்கஸ்தலங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு வணக்கத்திற்குரிய பௌத்த மதத் தலைவர்கள் அடங்கலாக பல்வேறுபட்ட தரப்புகளிலிருந்து விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஜயஶ்ரீ மஹாபோதி (புனித வௌ்ளரசு மரம்) மற்றும் ருவான்வெலி மஹாசாய என்பவற்றைச் சுற்றி அதிபாதுகாப்பு வேலியொன்றை நிர்மாணித்தல் உட்பட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.