• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹக்கல தாவரவியல் பூங்காவை அபிவிருத்தி செய்தல்
- 1861 ஆம் ஆண்டில் பிரித்தானியாவினால் ஆரம்பிக்கப்பட்ட ஹக்கல தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் சுமார் 9 இலட்சம் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு பார்வையாளர்கள் வருகைதருகின்றனர். உயர் சர்வதேச தரங்களுக்கு உட்பட்டு தாவரவியல் பூங்காவை அபிவிருத்தி செய்வதன் மூலம் கூடுதலான பார்வையாளர்களை மேலும் ஈர்ப்பதற்கான சாத்தியம் நிலவுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2023 ஆம் ஆண்டளவில் இந்த தாவரவியல் பூங்காவின் வருமானத்தை 25 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்வதற்கும் புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்த பூங்காவிற்கு அண்மையிலுள்ள பிரதேசங்களில் சமூக பொருளாதார விருத்தியினை உருவாக்குவதற்குமாக தாவரவியல் பூங்காவை விருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. புராதன தாவர மாதிரிகள் உக்காமல் பாதுகாத்தல், தாவர பூங்காவுக்குள் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ரீதியிலான செயற்பாடுகளை மேம்படுத்துதல், கல்வி செயற்பாடுகளை பல்வகைமைப்படுத்தல் மற்றும் தாவரங்களுக்கான தேசிய விதை வங்கியொன்றை தாபித்தல் அடங்கலாக தாவரவியல் பூங்காவை விருத்தி செய்யும் இந்தக் கருத்திட்டத்தை 2019 - 2023 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.