• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாதுகாக்கப்பட்ட பரிவர்த்தனைகள் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு அவர்களுடைய அசையா சொத்துக்கள் அடங்கலாக சொத்துக்களின் ஒரு பகுதியை பயன்படுத்தி கடன் வசதிகளை பெற்றுக் கொண்டு தொழில்முயற்சியினை விருத்திசெய்வதற்கான வசதிகளை வழங்கும் நோக்கில் 2009 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பாதுகாக்கப்பட்ட பரிவர்த்தனைகள் சட்டமூலத்தை இரத்துச் செய்து பாதுகாக்கப்பட்ட பரிவர்த் தனைகளின் சட்டக் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2009 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பாதுகாக்கப்பட்ட பரிவர்த்தனைகள் சட்டமூலத்தை இரத்துச் செய்து புதிய சட்டமொன்றை வரைவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதோடு, அவ்வாறு வரையப்படும் சட்டமூலம் காரணமாக ஏற்கனவே நடைமுறையிலுள்ள விபரமளிப்பு கட்டளைச் சட்டம், நம்பிக்கை பெறுகை கட்டளைச் சட்டம், ஈடுவைக்கும் சட்டம், 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதி குத்தகை சட்டம், 1990 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க உள்நாட்டு நம்பிக்கை பெறுகை சட்டம், 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் மற்றும் ஆவணங்கள் பதிவு செய்தல் கட்டளைச் சட்டம் போன்றனவும் திருத்தப்படவேண்டுமென இனங்காணப் பட்டதன் பின்னர், அதன் பொருட்டும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக வரையப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட பரிவர்த்தனைகள் சட்டமூலத்துடன் திருத்தப்பட வேண்டுமென இனங்காணப் பட்டுள்ள மேற்போந்த 07 சட்டங்களையும் கட்டளைச் சட்டங்களையும் திருத்துவதற்காக வரையப்பட்டுள்ள சட்டமூலங்களை வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.