• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அகற்றப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்றிக் மீள் சுழற்சி செய்வதற்கென Pyrolysis இயந்திரமொன்றை நிறுவுதல்
- நகர பிரதேசங்களிலிருந்து திண்மக் கழிவுகளாக ஒன்றுசேரும் அத்துடன் முறையற்ற விதத்தில் இடப்படும் பொலித்தீன் கழிவுகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்தாது சூழலில் விடப்படுவது பாரிய சுற்றாடல் மற்றும் சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. நகர கழிவுகளுடன் கலந்துள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்றிக் கழிவுகளை Pyrolysis தொழிநுட்பத்தை பயன்படுத்தி மீள் சுழற்சி செய்வதற்கு தென் கொரியாவின் M/s. Omega Energy Enviro Tech நிறுவனத்தினால் இயந்திர மொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் பொலித்தீன் மற்றும் பிளாஸ்றிக் கழிவுகள் Pyrolysis எண்ணெய் மற்றும் காபன் தூள்களாக மாற்றப்படுவதோடு, இந்த எண்ணெய்யானது எரிபொருளொன்றாகவும் காபன் தூள் வீதிகளில் பரப்பும் கல் உற்பத்திக்காக பயன்படுத்தும் சாத்தியமும் நிலவுகின்றது. M/s. Omega Energy Enviro Tech நிறுவனத்தினால் இந்த இயந்திரத்தை மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இதனை கம்பஹா மாவட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ கருத்திட்டத்தின் கீழ் அத்தனகல்ல பெத்தியாகந்த காபன் பசளை முனைவிடத்தில் நிறுவும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.