• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வலுவூட்டுதல்
- அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 344 என்றும் அவற்றில் 156 குடும்பங்கள் அவர்களின் உறுப்பினர்களில் ஒருவரையேனும் இழந்துள்ளனர் என்றும் 188 குடும்பங்களில் குறைந்தது ஒரு உறுப்பினரேனும் காயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது. அத்தகைய குடும்பங்களின் சகல உறுப்பினர்களினதும் மேம்பாடு மற்றும் சமூக, பொருளாதார, கலாசார, கல்வி மற்றும் ஆன்மீக நலனோம்புகை கருதி துரிதமான வேலைத் திட்டமொன்றுக்கான தேவையினை அரசாங்கம் இனங்கண்டுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வலுவூட்டுவதற்காக, கத்தோலிக்க சபையின் சமூக நடவடிக்கை அங்கமொன்றாகவுள்ள 'செத்சரண' நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் விசேட 'சுயசக்தி' மனித அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தும் பொருட்டு நிதியங்களை பெற்றுக் கொள்வதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.