• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பௌதிக மற்றும் மனித வள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், ஊவா வெல்லஸ்ஸ
- காலனித்துவ நிருவாகத்தினால் நடாத்தப்பட்ட பாரிய அடக்குமுறைக்கு எதிராக ஊவா வெல்லஸ்ஸ மக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுதந்திர போராட்டத்தை அடக்குவதற்காக, அப்பிரதேசங்கள் தீவிரமான பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியில் அமிழ்ந்துபோவதை விளைவித்து பாரிய அழிவினை ஏற்படுத்தும் மட்டத்தில் இப்பிரதேசத்திலுள்ள குளங்களையும் அணைக்கட்டுக்களையும், தோட்டங்களையும் வயல்களையும், விகாரைகளையும் ஆதனங்களையும் மற்றும் மனித வாழ்வாதாரத்தையும் பிரித்தானியர்கள் பரவலாக அழித்தனர். அப்பிரதேசங்களின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவற்றின் பௌதிக மற்றும் மனித வளங்களில் மேலும் துரித அபிவிருத்தியை மேற்கொள்வது அத்தியாவசியமானது. அதற்கிணங்க, 2019 ஆம் ஆண்டு சார்பில் பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 400 மில்லியன் ரூபா தொகையை பயன்படுத்தி, நீர் முகாமைத்துவம், கைத்தொழில் ஊக்குவிப்பு, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி, புனித தலங்களின் புனரமைப்பு, விவசாய பண்ணைகள் மற்றும் கிராமிய கைத்தொழில்களை மேம்படுத்தல் போன்றவற்றை இலக்காக கொண்ட நிகழ்ச்சித்திட்டமொன்றை அமுல்படுத்து வதற்கும் அதன் மூலம் மகளிர் மற்றும் இளையோர் சமுதாயம் தொடர்பிலான வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.