• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசகரும மொழித் தினம் மற்றும் அதற்கு ஒருங்கிணைவாக வாரமொன்றை பிரகடனப்படுத்தல்
- தற்போதைய அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்ப, சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகலாக பயன்படுத்தப்படும் அதேவேளை ஆங்கிலம் இணைப்பு மொழியொன்றாக பயன்படுத்தபடுகின்றது. சகல இலங்கையர்களினதும் மொழி உரிமையை உறுதிப்படுத்தும் பொருட்டும் எதிர்பார்க்கப்படும் நலன்களை மேலும் துலாம்பரமாக காட்டும் பொருட்டும், அரசகரும மொழித் தினத்தை அதற்கு ஒருங்கிணைவாக மொழி வாரமொன்றுடன் சேர்த்து பிரகடனம் செய்வதும் அதனை வருடாந்தம் கடைப்பிடிப்பதும் பொருத்தமானதென பிரேரிக்கப்பட் டுள்ளது. இதன் மூலம், அரசாங்க நிறுவனங்களில் இரு மொழி சேவை வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளமுடியுமென்றும், பாகுபாடுகள் களையும் அதேவேளை சகல சமூதாயங்களினதும் சம உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளமுடியுமென்றும், அதன் மூலம் சமாதனதிற்கும் நல்லிணக்கத்திற்கும் மதிப்பு கொடுக்கும் சமுதாயமொன்றை உருவாக்கிக் கொள்ளமுடியுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க 2019 ஆம் ஆண்டு யூன் 03 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கும் ஒரு முழு வாரத்திற்கு அரச மற்றும் தனியார் துறைகளின் முழுப்பங்களிப்புடன் அரசகரும மொழி கொள்கையின் பயனுறுதிவாய்ந்த அமுலாக்கத்திற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப் படுத்தும் குறிக்கோளுடன் கூறப்பட்ட தினத்தை அரசகரும மொழிகள் தினமாக பிரகடனப்படுத்தும் பொருட்டு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.